சிறையில் இருந்தபடி போதைப்பொருள் விற்பனை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Advertisement
சென்னையில் உள்ள மிக முக்கியமான புழல் சிறையில் உயர் அந்தஸ்தில் பல அதிகாரி இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சிறைத்துறையும், காவல்துறையும் விழித்துக்கொண்டு சிறைவாசி யார், யாருக்கு பேசினார், யார் அவருக்கு மெத்தபட்டமைன் விநியோகித்தது, அதற்கு பணப்பரிமாற்றம் எப்படி நடந்தது என்பதை கண்டறிந்து, இந்த குற்ற சம்பவத்தின் மூலக் குற்றவாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் சட்டத்தின் பிடியில் ஒப்படைத்து, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். இதில் மத்திய அரசும் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement