தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா: உடல்நலக் குறைவால் பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம்

புதுடெல்லி: துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் நேற்று இரவு திடீரென ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவால் பதவி விலகுவதாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Advertisement

நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் ஜெகதீப் தன்கர். 2022 ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ெஜகதீப் தன்கர் பதவி ஏற்றார். அவையிலும், அவைக்கு வெளியேயும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களுக்கும் மாநிலங்களவை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கருக்கும் பலமுறை கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜெகதீப் தன்கர் மாநிலளங்களவையை வழிநடத்தினார். அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க நோட்டீஸ் தீர்மானம் தொடர்பான மனுக்களை அவரிடம் அனைத்துக்கட்சி எம்பிக்களும் வழங்கினர். இந்த சூழலில் நேற்று இரவு துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜெகதீப் தன்கர் திடீரென அறிவித்தார். இதுதொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த கடிதத்தில்,’ உடல்நலனுக்கு முன்னுரிமை அளிக்கவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், அரசியலமைப்பின் பிரிவு 67(அ) இன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், இந்திய துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது பதவிக் காலத்தில் அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கும், இனிமையான அற்புதமான பணி உறவுக்கும் ஜனாதிபதியான உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பிரதமருக்கும், அமைச்சர்கள் குழுவிற்கும் எனது ஆழ்ந்த நன்றி. பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் விலைமதிப்பற்றவை. மேலும் நான் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் நான் பெற்ற அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் பாசம் என்றென்றும் போற்றப்படும். மேலும் எனது நினைவில் பதிக்கப்படும். நமது மாபெரும் ஜனநாயகத்தில் துணைத் தலைவராக நான் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்’என்று தெரிவித்துள்ளார். தன்கரின் பதவிக்காலம் வரும் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ளது.

ஆனால் அவர் தனது பதவியை உடல் நலத்தை காரணம் காட்டி ராஜினாமா செய்துள்ளார். துணை ஜனாதிபதிதான் மாநிலங்களவையில் தலைவர் ஆவார். அந்த அடிப்படையில் நேற்று அவையை அவர் தான் வழிநடத்தினார். மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாள் கூட்டம் முடிந்ததும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் நேற்று காலை முதல் மாலை வரை மாநிலங்களவையை வழிநடத்திய தன்கர் திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது. தன்கரின் இந்த திடீர் அறிவிப்பு டெல்லி அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement