ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவுக்கு வேறு காரணங்களைத் தேடுவது சரியல்ல: உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்!!
டெல்லி: ன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் ராஜினாமா குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று திடீரென குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர். உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் ராஜினாமா விவாதத்துக்கு உள்ளன நிலையில், முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். உடல்நலப் பிரச்சனையால் தனிப்பட்ட முறையில் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவுக்கு வேறு காரணங்களைத் தேடுவது சரியல்ல. தமது பதவிக் காலத்தில் அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு ஏற்ப சிறப்பாக பணியாற்றினார் தன்கர் என அவர் தெரிவித்தார் .