இத்தாலி ஓபன் டென்னிஸ்: அசராத அசரங்கா அசத்தல் வெற்றி
Advertisement
ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரங்கா அபார வெற்றி பெற்றார். இத்தாலியின் ரோம் நகரில், இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரங்கா, கொலம்பியா வீராங்கனை மரியா கேமிலா ஒசோரியோ செரானோ மோதினர்.
இந்த போட்டியில் துவக்கம் முதல் துடிப்புடன் விளையாடிய அசரங்கா, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை சாரா எர்ரனி மோதினர். இந்த போட்டியில், ஒசாகா அநாயாசமாக ஆடி, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
Advertisement