இத்தாலியில் நடக்கும் ஜிடி 4 ரேஸ் மீண்டும் கார் விபத்தில் சிக்கினார் அஜித் குமார்
Advertisement
அந்த வகையில், இத்தாலி நாட்டில் நடந்து வரும் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் அஜித் குமார் பங்கேற்றார். நேற்று நடந்த போட்டியில் அஜித் குமார் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. நல்லவேளையாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். ஒரு வளைவில் வேகமாக திரும்பும்போது, பழுதாகி நின்றிருந்த மற்றொரு கார் மீது அஜித் குமாரின் கார் மோதியது. அந்த காரின் மீது மோதாமல் இருக்க அவர் தீவிர முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த அஜித் குமாரின் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது.
சர்க்யூட்டில் சிதறிக்கிடந்த கார் பாகங்களை அகற்றிய ஊழியர்களுடன் இணைந்து அஜித் குமாரும் வேகமாக கார் பாகங்களை அப்புறப்படுத்தினார்.
Advertisement