ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை சிபிசிஐடி விரைவில் குற்றப்பத்திரிகை
நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் (27) கடந்த ஜூலை 27ம்தேதி ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது காதலியின் தம்பி சுர்ஜித், தந்தை எஸ்ஐ சரவணன், பெரியம்மா மகன் ஜெயபால் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் சுர்ஜித், சரவணனை காவலில் எடுத்து 2 நாள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கவினின் காதலியான சித்தா டாக்டர் சுபாஷினி, தாய் கிருஷ்ணகுமாரியிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை அறிக்கை, வீடியோ, போட்டோக்களுடன் நெல்லை மாவட்ட 2வது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.
Advertisement
Advertisement