இஸ்ரோ தொலையுணர்வு மையத்தில் 96 அப்ரன்டிஸ்கள்
1. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: (இன்ஜினியரிங்): 11 இடங்கள் (எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்-2, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்-2, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-3, சிவில் இன்ஜினியரிங்-1, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-1, நூலக அறிவியல்-2).உதவித் தொகை: ரூ.9,000. தகுதி: ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பி.இ., படித்திருக்க வேண்டும். நூலக அறிவியல் பிரிவுக்கு ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்து முதல் வகுப்பில் பி.லிஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: (டிப்ளமோ இன்ஜினியரிங்) 55 இடங்கள். (டிப்ளமோ இன்ஜினியரிங்- 30 இடங்கள். ஆல்ஸ்ட்ரீம்). கமர்ஷியல் பிராக்டீஸ்- 25. உதவித் தொகை ரூ.8,000. தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். கமர்ஷியல் பிராக்டீஸ் பிரிவுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
3. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: (பொது பிரிவு): 30 இடங்கள். (பி.ஏ.-10, பிஎஸ்சி-10, பி.காம்-10). உதவித் தொகை: ரூ.9,000. தகுதி: பி.ஏ.,/பிஎஸ்சி.,/பி.காம் படித்திருக்க வேண்டும்.
டிகிரி, டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து பயிற்சிகளுக்கும் ஜூலை 2023ம் ஆண்டுக்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
www.mhrdnats.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் தங்களைப் பற்றிய விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள எஸ்டாபிளிஷ்மென்ட் நேம் லிஸ்ட்டை கிளிக் செய்து, அதிலிருந்து இஸ்ேரா நிறுவனத்தை தேர்வு செய்து www.umang.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.isro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.09.2025