இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் செய்தி தொடர்பாளர் பலி
டெய்ர் அல் பலாஹ்: 21 மாதங்களை கடந்து நீடித்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் காசா பகுதியில் இதுவரை 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகி விட்டனர். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்குதலில் நேற்று முன்தினம் 43 பாலஸ்தீனர்களும், நேற்று காலை 11 பாலஸ்தீனர்களும் உயிரிழந்து விட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் ஆயுத பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபைடா இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறி உள்ளார்.
Advertisement
Advertisement