இஸ்ரேல் மீது இந்த வாரம் ஈரான் தாக்குதல் நடத்தும்: அமெரிக்கா கணிப்பு
Advertisement
அதேநேரம் இஸ்ரேல் - காசா இடையிலான பதற்றங்களைத் தணிக்கவும், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்த தேவையான ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு தகவல் தொடர்பு ஆலோசகர் ஜான் கிர்பி அளித்த பேட்டியில், ‘ மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேல் மீதான குறிப்பிடத்தக்க தாக்குதல் நடந்தால், அதனை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் இந்த வாரம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Advertisement