இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட 31 நிருபர்களின் இறுதிச்சடங்கு
ஏமன்: இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 31 நிருபர்களின் இறுதிச்சடங்குகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இஸ்ரேலின் பல அடுக்கு வான் பாதுகாப்புகளை மீறி கடந்த வாரம் தெற்கு விமான நிலையத்தின் மீது ஹவுதிகள் டிரோன் மூலமாக தாக்குதல் நடத்தினார். இதில்விமான நிலைய கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்தது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
Advertisement
இதனை தொடர்ந்து ஏமன் நாட்டின் தலைநகரான சனாவின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உள்ளூரை சேர்ந்த 31 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்படும் 31 பத்திரிக்கையாளர்களின் இறுதிச்சடங்கு நேற்று நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Advertisement