இஸ்ரேலுக்காக தாக்குதல் நடத்திய 6 பேர் மரண தண்டனை ஈரானில் நிறைவேற்றம்
துபாய்: இஸ்ரேலுக்காக தாக்குதல் நடத்தியதாக கைதான 6 பேரின் மரண தண்டனையை ஈரான் நிறைவேற்றி உள்ளது. இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் 12 நாட்கள் போர் நடந்தது. அப்போது குஜெஸ்தான் மாகாணத்தில் உள்ள கோர்ரம்ஷஹர் பகுதியில் குண்டுவெடிப்புகள் நடத்தியதாகவும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரை கொன்றதாகவும் 6 பேரை ஈரான் அரசு கைது செய்தது.
Advertisement
இஸ்ரேல் உத்தரவுப்படி இவர்கள் தாக்குதல் நடத்தியதாக ரகசிய விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டு 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 6 பேரின் மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
Advertisement