தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இஸ்ரேலுடனான போரில் நாட்டில் சுமார் 1,060 பேர் உயிரிழப்பு: ஈரான் அரசு அறிவிப்பு!!

Advertisement

தெஹ்ரான்: இஸ்ரேலுடனான போரில் ஈரான் நாட்டில் சுமார் 1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. காசா மீது ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வரும் சூழலில், ஈரானும் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி தரும் வகையில், ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

ஈரானின் ராணுவ தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீது “ஆபரேஷன் ரைசிங் லயன்” எனும் பெயரில் இஸ்ரேல் கடந்த ஜூன் 13ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரான் - இஸ்ரேல் இடையில் போர் தொடங்கிய நிலையில், இருநாடுகளும் ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன. இந்தப் போரானது, கடந்த ஜூன் 24ம் தேதி 12ம் நாளை எட்டியதுடன், போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதை, இருநாடுகளும் ஏற்றுக்கொண்டன. தற்போது போர் நிறுத்தம் அமலிலுள்ளதால், போரில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஈரான் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், ஈரானின் தியாகிகள் மற்றும் படைவீரர்கள் அறக்கட்டளையின் தலைவர் சயீத் ஒஹாதி, அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போரில் சுமார் 1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதால், பலி எண்ணிக்கை 1,100 ஆக அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் போரில் ஈரானில் சுமார் 435 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 1,090 பேர் கொல்லப்பட்டதாகவும், 4,475 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் வாஷிங்டனைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பு கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement