இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக புகார்: இதுவரை 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது ஈரான் அரசு
ஈரான்: இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு ஈரான் அரசு மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. பாதக் ஷபாசி என்ற நபர் ஈரானிய தரவு மையங்கள் மற்றும் பாதுகாப்பு நிலைகள் குறித்த விவரங்களை இஸ்ரேலுக்கு அளித்ததாக கூறி தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
எனினும் அந்த நபரை அரசு கடுமையான சித்திரவதை செய்து செய்யாத தவறை செய்ததாக கூறவைத்ததாக ஈரானிய மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான போரின் போது உளவு கூறிய புகாரில் ஈரான் இதுவரை 8 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது.
Advertisement