ஈஷாவில் விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழா!
கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பு “ பொங்கல் விழா" நேற்றும் இன்றும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் பெரும் உற்சாகத்தோடு நடைபெற்றது.
ஈஷாவில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விவசாயத்தில் மிக முக்கிய பங்காற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈஷாவில் பராமரிக்கப்படும் நாட்டு மாடுகளுக்கு சிறப்பான முறையில் வழிபாடுகள் செய்யப்பட்டன.
மேலும், அருகி வரும் நாட்டு மாடு இனங்களான காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட 23 வகையிலான நாட்டு மாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. ஈஷா கோசாலையில் 700-க்கும் அதிகமான பாரம்பரிய நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் விடுமுறை நாட்களை முன்னிட்டு நேற்றும் இன்றும் லட்சக்கணக்கான மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.