நீர்ப்பாசன வாய்க்கால்கள் தூர்வார ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கால்வாய் பாசனத்தைச் சார்ந்த நிலங்களில் 85 விழுக்காடு நிலங்கள், காவிரி நீரை நம்பியுள்ளன. காவிரி ஆற்றில் லட்சக்கணக்கான கன அடி நீர் திறக்கப்பட்டாலும் கடைமடை பகுதி வரை நீர் செல்வதில்லை. இதற்கு காரணம் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததுதான். பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததும், பல வாய்க்கால்கள் சேதமடைந்துள்ளதும் ஏரி, குளங்கள் பாலைவனம் போல் காட்சி அளிப்பதற்கு மற்றொரு காரணம்.
இதில் முதல்வர் தலையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அரசுப் பதிவேட்டில் உள்ள அளவுக்கு ஏற்ப பாசன வாய்க்கால்களை தூர் வாரவும், கிளை வாய்க்கால்களை புனரமைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.