முறைகேடுகளை தவிர்க்க மதுரை மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது: உயர்நீதிமன்ற கிளை
மதுரை: முறைகேடுகளை தவிர்க்க மதுரை மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. 'மதுரை மாநகராட்சி எடுத்துவரும் நடவடிக்கை நீதிமன்றத்துக்கு திருப்தி அளிக்கிறது. மதுரை மாநகராட்சி பரிந்துரையை அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் விரிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு அக்.27க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement