அயர்லாந்தில் ஆடை களைந்து இந்தியர் மீது கொடூர தாக்குதல்: இனவெறி நடவடிக்கையா?
Advertisement
இதுதொடர்பாக ஐரிஷ் தேசிய காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இனவெறி தொடர்பான தாக்குதலா இது என்ற அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அயர்லாந்திற்கான இந்திய தூதர் அகிலேஷ் மிஸ்ரா இந்த சம்பவம் பற்றி கேள்வி பட்டதும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இந்தியரை உடனடியாக காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த அயர்லாந்து மக்களுக்கும், பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் குற்றவாளியை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். தாக்கப்பட்ட இந்தியர் மூன்று வாரங்களுக்கு முன்புதான் அயர்லாந்திற்கு சென்றது தெரிய வந்துள்ளது.
Advertisement