தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல்; உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும்: பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை

Advertisement

பாரிஸ்: ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், இதன் மூலம் உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்று பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் பி-2 ரக போர் விமானங்கள், சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி இரண்டு அணு உலைகளையும், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவப்பட்ட டோமாஹாக் ஏவுகணைகள் மூன்றாவது அணு உலையையும் தாக்கின.

இந்தத் தாக்குதல் மிகப்பெரிய ராணுவ வெற்றி என்றும், ஈரானின் அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதத்துடன் அறிவித்தார். ஆனால், அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுமையாக அழிக்கவில்லை என்றும், சில மாதங்களுக்கு மட்டுமே தள்ளி வைத்துள்ளது என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த தாக்குதல்கள் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அளித்த பேட்டியில், ‘அமெரிக்காவின் தாக்குதல்கள் திறம்பட இருந்தாலும், இதன் மூலம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேறினால் அதுவே மிக மோசமான சூழலை உருவாக்கும்.

அவ்வாறு நடந்தால், அது உலக நாடுகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும். இந்த ஒப்பந்தத்தைக் காப்பாற்றும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் அடுத்த சில நாட்களில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். ஏற்கனவே இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசினேன். மீண்டும் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபடுவதைத் தடுப்பதே தற்போதைய முக்கிய நோக்கம்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement