தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரான் சபஹார் துறைமுகம் வழியாக வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு அளித்த சலுகை ரத்து: அமெரிக்க நடவடிக்கையால் பல நூறு கோடி ரூபாய் முதலீடு முடங்கும் ஆபத்து

வாஷிங்டன்: சபஹார் துறைமுகம் தொடர்பான பொருளாதாரத் தடை விலக்கை அமெரிக்கா ரத்து செய்துள்ளதால், இந்தியாவின் பல நூறு கோடி ரூபாய் முதலீடுகளும், பிராந்திய முக்கியத்துவமும் கேள்விக்குறியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவிற்கு ஈரானின் சபஹார் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தான் துறைமுகத்தை பயன்படுத்தாமல், சபஹார் துறைமுகம் மூலம் இந்தியாவால் எளிதில் வர்த்தகம் செய்ய முடிகிறது. இந்தத் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா கடந்த 2003ம் ஆண்டிலேயே விருப்பம் தெரிவித்திருந்தது. இதற்காக, கடந்த 2018ல் அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளிலிருந்து இந்தியாவிற்கு சிறப்பு விலக்கு அளித்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம், சபஹார் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை இந்தியா ஈரானுடன் மேற்கொண்டது.

Advertisement

இதற்காக சுமார் 120 மில்லியன் டாலர் முதலீடு செய்யவும், 250 மில்லியன் டாலர் கடன் உதவி வழங்கவும் இந்தியா ஒப்புக்கொண்டிருந்தது. இந்த நிலையில், சபஹார் துறைமுகத்திற்கு வழங்கி வந்த பொருளாதாரத் தடை விலக்கு சலுகையை வரும் 29ம் தேதி முதல் ரத்து செய்வதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. ஈரான் அரசின் மீது அதிகபட்ச அழுத்தத்தை செலுத்தும் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வந்த பிறகு, சபஹார் துறைமுகத்தில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் உட்பட எந்தவொரு நிறுவனமும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாக நேரிடும் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு, இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சபஹார் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை போன்ற மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி வந்த நிலையில், அந்தப் பணிகளும் இனி பாதிக்கப்படும். மேலும், ரஷ்யா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் சர்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து வழித்தடத்துடன் இணைவதற்கான இந்தியாவின் திட்டங்களும் இதனால் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம், அமெரிக்காவுடனான தனது வளர்ந்து வரும் நட்புறவுக்கும், ஈரானுடனான நீண்டகால உறவுக்கும் இடையே நெருக்கடியான சூழலில் இந்தியாவைத் தள்ளியுள்ளது. இது இந்தியாவின் பல நூறு கோடி ரூபாய் முதலீடுகளை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், சர்வதேச அரங்கில் பெரும் சவாலையும் உருவாக்கியுள்ளது.

2024-25ம் நிதியாண்டில் 22 லட்சம் டன்

ஈரானின் சபஹார் துறைமுகம் வழியாக இந்தியா மேற்கொள்ளும் வருடாந்திர வர்த்தகத்தின் துல்லியமான புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்தத் துறைமுகம் கையாளும் மொத்த சரக்குகளின் அளவு சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் 28 லட்சம் டன்னாகவும், 2024-25ம் நிதியாண்டில் 22 லட்சம் டன்னாகவும் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. குறிப்பாக, 2023-24ல் கொள்கலன் போக்குவரத்து 34% வளர்ச்சி கண்டுள்ளது. இந்தத் துறைமுகத்தின் செயல்பாடுகளை இந்தியா கடந்த 2018ல் ஏற்றதிலிருந்து, ஆப்கானிஸ்தானுக்கு 25 லட்சம் டன் கோதுமை மற்றும் 2,000 டன் பருப்பு வகைகளை அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் துறைமுகங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, சபஹார் துறைமுகம் வழியாக சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் இணைய ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த 10 மாதங்களில் இந்தியாவுடனான ஆப்கானிஸ்தானின் வர்த்தகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உட்பட சுமார் 650 மில்லியன் டாலரை எட்டியுள்ளதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பரில் தெரிவித்திருந்தது.

Advertisement