ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
டெல்லி: தமிழ்நாடு டி.ஜி.பி. தேர்வுக்கு தனது பெயரைப் பரிசீலிக்கக்கோரி ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு பிரமோத்குமார் மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. செப்டம்பரில் ஓய்வுபெறும் நிலையில் மனுதாக்கல் செய்துள்ளதால் ஏற்க முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்தார். டிஜிபி சங்கர் ஜிவால் பதவிக்காலம் இம்மாதம் முடிவடைய உள்ளது. ஓய்வுபெறும் 6 மாதத்துக்குள் யாரையும் டிஜிபியாக நியமனம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
Advertisement
Advertisement