ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால் ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்க நேரிடும்: ஐகோர்ட் கிளை
மதுரை: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால் ரூ.20 லட்சம் வரை விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தன்னை இந்த பொறுப்பில் இருந்து அகற்றும் நோக்கில், பொய்யான பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக பல்வீர்சிங் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் பணி புரிந்த ஐபிஎஸ் அதிகாரியான பல்வீர்சிங் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். குறிப்பாக இரண்டு ஆண்டுகள் முன்பாக அவர் பணியாற்றிய போது விசாரணைக்கு அழைத்து சென்ற நபரிடம் பல்களை புடுங்கி சித்தரவதை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.சுமார் 4 வழக்குகளில் இவர் மீது அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஐபிஎஸ் அதிகாரியான பல்வீர்சிங் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தனி நீதிபதி சமீம் அஹமது முன்பாக விசாரணை வந்து இருந்தது. விசாரணையின் போது நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விவகாரத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரி மீது ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் குடுத்த புகார் அடிப்படியில் எவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அதுமட்டும் இல்லாமல் எந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டு இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போன்ற முழு விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதுபோல் மனுதாரர் தரப்பில் இந்த உத்தரவுக்கு பல்வீர்சிங் இடைக்கால தடை கோரியும் புதிய மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இந்து மட்டும் இல்லாமல் இவர் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுகளைம் முகாந்திரம் இல்லை என்றல் அதிகபட்சமாக அபராதம் ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சிபிசிஐடி தரப்புக்கு எச்சரித்த நீதிபதி இது சம்மந்தமாக இருதரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.