ஐ.பெரியசாமி வழக்கு - உச்சநீதிமன்றம் தடை
சொத்துக்குவிப்பு வழக்கில் ஐ.பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஐ.பெரியசாமி மீது அதிமுக ஆட்சியில் 2012ல் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.