நியோமேக்ஸில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் அக். 8ம் தேதிக்குள் புகார் அளிக்கலாம்
சென்னை: பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: உயர் நீதிமன்ற உத்தரவின்படி நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் பி லிமிடட் மற்றும் துணை நிறுவனங்களில் (1 44) முதலீடு செய்து பாதிக்கப்பட்டு, இதுவரை புகார் அளிக்காத முதலீட்டாளர்கள் வரும் 8.10.2025க்குள் காவல் துணை கண்காணிப்பாளர், பொருளாதார குற்றப்பிரிவு, நியோமேக்ஸ் (எஸ்ஐடி), சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க் டவுன் பேருந்து நிலையம் அருகே, மதுரை-625017 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது eowmadurai2@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம். வெளிநாட்டிலோ அல்லது தொலைவிலோ இருப்பின் eowmadurai2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் தரலாம்.
Advertisement
Advertisement