தேனி: பெரியகுளம் அருகே பூட்டிய வீட்டில் பணம் திருடு போனது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் விமல்(32). பில்டிங் காண்ட்ராக்டர். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள பீரோவில் ரூ.1.60 லட்சத்தை வைத்து விட்டு வேலைக்கு கிளம்பி சென்றார். இவரது மனைவி பிரியங்கா காலை 11 மணியளவில் வீட்டினை பூட்டிவிட்டு வீட்டின் அருகே மறைவான இடத்தில் சாவியை வைத்து விட்டு சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது சாவி வேறு இடத்தில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.அப்போது பீரோ திறந்த நிலையில் இருந்தது. மேலும் அதில் வைத்திருந்த ரூ.1.60 லட்சம் பணம் காணாமல் போனது தெரிய வந்தது. இது தொடர்பாக விமல் அளித்த புகாரின் அடிப்படையில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.