தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மரணம் எஸ்.ஐ., தலைமை காவலர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: 2009 மார்ச் மாதம் பழனி என்பவர் குடிபோதையில் தகராறு செய்வதாக வந்த புகாரில், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தினர், மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறி கடுமையாக தாக்கியுள்ளனர்.

Advertisement

அதன்பின்னர், வீட்டிற்கு அனுப்பப்பட்ட பழனி அன்று இரவு மரணமடைந்ததால், கோட்டூர்புரம் போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பழனியின் தந்தை ரங்கநாதன் கொடுத்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் அதை சைதாப்பேட்டை உதவி ஆணையருக்கு அனுப்பியுள்ளார். காவல்துறையினர் மீதான வழக்கு என்பதால், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அவரது கூடுதல் நேர்முக உதவியாளரான சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணையில், பழனியின் மரணத்திற்கு காவல்துறையினரின் தாக்குதல் தான் காரணம் என்று அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யபட்டது.

அதனடிப்படையில், சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் சி.ராஜேந்திரனின் புகாரை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கோட்டூர்புரம் காவல் நிலைய குற்றப் பிரிவு உதவி ஆய்வாளராக இருந்த பி.ஆறுமுகம் தலைமை காவலர்களாக இருந்த எம். மனோகரன், பி.என்.ஹரிஹர சுப்ரமணியன், வின்சென்ட், ஏழுமலை ஆகிய 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கின் விசாரணை சென்னை 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, புகார்தாரரான சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் தரப்பில் அரசின் பெருநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.தேவபிரசாத் ஆஜராகி வாதிட்டார். வழக்கு நிலுவையில் இருந்தகாலத்தில் வின்சென்ட் மற்றும் ஏழுமலை ஆகியோர் இறந்துவிட்டதால் அவர்கள் இருவர் மீதான வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதி வி.பாண்டியராஜ், பழனியின் மரணத்திற்கு காவல்துறையினர் தாக்கியதுதான் காரணம் என்று விசாரணையில் நிரூபணம் ஆவதாக கூறி, கோட்டூர்புரம் எஸ்.ஐஆக இருந்த பி.ஆறுமுகம் ஏட்டுகளாக இருந்த எம்.மனோகரன், பி.என்.ஹரிஹர சுப்ரமணியன் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்தார். அவர்களது குற்றங்களுக்காக எஸ்.ஐ. உள்ளிட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement