தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விசாரணை என்ற பெயரில் மக்களை போலீசார் கொடுமை செய்வதை வேடிக்கை பார்க்க முடியாது: சென்னை ஐகோர்ட் நீதிபதி கருத்து

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சித்தேந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எனக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவின் அடிப்படையில், விசாரணை என்கின்ற பெயரில் நந்தம்பாக்கம் போலீசார் கொடுமைப்படுத்துகிறார்கள். எனவே என்னை தொந்தரவு செய்யக் கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணை வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகிலன், மனுதாரருக்கு எதிரான புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்றார்.
Advertisement

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்ற புகார் என்றால் அது குறித்து போலீசாருக்கு விசாரணை நடத்த முழு அதிகாரம் உள்ளது. ஆனால், அந்த அதிகாரத்தை சட்டத்தின்படிதான் பயன்படுத்த வேண்டும். சட்டம் போலீஸ் விசாரணையில் இருந்து இது போன்ற நபர்களை பாதுகாக்கும் அதிகாரத்தை மாஜிஸ்திரேட்டிடம் வழங்கியுள்ளது. அதே நேரம் புலன் விசாரணையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. இது போன்ற பல மனுக்கள் இங்கு தாக்கல் செய்யப்படுகிறது. எனவே விசாரணை என்கின்ற பெயரில் போலீசார் செய்யும் கொடுமையை இந்த நீதிமன்றம் கண்டு கொள்ளாமலும், தடுக்காமலும், கண்களை மூடிக்கொண்டும் இருக்க முடியாது.

எனவே ஒரு குற்றப் புகாரில் சம்பந்தப்பட்ட நபரை அல்லது சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு பி.என்.எஸ்.எஸ் சட்ட பிரிவு 129ன் கீழ் சம்மன் அனுப்ப வேண்டும். அந்த சம்மனில் எப்போது விசாரணைக்கு வர வேண்டும்? தேதி, நேரம் ஆகியவற்றையும் போலீசார் குறிப்பிட வேண்டும். அவ்வாறு நடத்தப்படுகின்ற விசாரணையின்போது பதிவு செய்யப்படுகின்ற வாக்குமூலத்தை போலீஸ் நிலைய டைரியில், வழக்கு விசாரணை டைரியில் குறிப்பிட வேண்டும். வழக்கு பதிவு மற்றும் ஆரம்பகட்ட விசாரணையை லலிதா குமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகளை போலீசார் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். இவ்வாறு நீதிபதி கூறினார்.

Advertisement

Related News