துபாயில் பணிபுரிய விருப்பமா? வரும் 8ம் தேதி நேர்காணல்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்
சென்னை: துபாயில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் வரும் 8ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய அரபு (துபாய்) அமீரகத்தில் பணிபுரிய 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் ஒருவருட பணி அனுபவத்துடன் 22 முதல் 45 வயதிற்கு உட்பட்ட எலக்ட்ரீசியன் பணிக்கு மாத வருமானம் ரூ.47,250, பிளம்பர் பணிக்கு ரூ.47,250, கொத்தனார் பணிக்கு ரூ.47,250, பிட்டர் பணிக்கு ரூ.47,250, பெயின்டர் பணிக்கு ரூ.44,100, லேபர் பணிக்கு ரூ.29,900 வழங்கப்படும். மேலும் உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
இப்பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்ப படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை 7.11.2025க்குள் அனுப்பவும். இப்பணிகளுக்கான நேர்காணல் 8.11.2025 அன்று காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருவெறும்பூர்: 620014, திருச்சி மாவட்டம் என்ற முகவரியில் நேரில் செல்லவும். கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் 044-22502267, வாட்ஸ்அப் எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.