நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சொல்லும் பேட்டி நாயகர் டிடிவி: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
சென்னை: நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சொல்லும் பேட்டி நாயகர் டிடிவி தினகரன் தோல்வி மேல் தோல்வியடைந்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். டி.டி.வி. தினகரன் பேட்டிக்கு எண்ட் கார்டு கிடையாதா என மக்கள் கேட்கிறார்கள். அதிமுக தலைமையை சிறுமைப்படுத்தி 9 ஆண்டாக பேசி வருகிறார். ஜெயலலிதா இருந்தபோது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு டிடிவி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார் என விமர்சித்தார்.
Advertisement
Advertisement