அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து செப்டம்பர் 3ம் தேதி ராமதாஸ் அறிவிப்பார்: எம்.எல்.ஏ.அருள் பேட்டி
விழுப்புரம்:அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து செப்டம்பர் 3ம் தேதி ராமதாஸ் அறிவிப்பார்: எம்.எல்.ஏ.அருள் பேட்டி அளித்துள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு முன் வைத்தது. குற்றச்சாட்டுக்கு விளக்கம் கோரி பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அன்புமணி பதிலளிக்க கெடு முடிந்த நிலையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது.
அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டம்?
அன்புமணி பதிலளிக்க கெடு முடிந்த நிலையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காத அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டது. நாளை பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். 16 குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் தர அன்புமணிக்கு ஆக.19ல் நோட்டீஸ் அனுப்பியது ராமதாஸ் தரப்பு. பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் ராமதாஸிடம் ஒப்படைக்கப்படும்.
அன்புமணி பதிலுக்காக 2 நாள் காத்திருக்க முடிவு - அருள்
அன்புமணி பதிலுக்காக மேலும் 2 நாட்கள் காத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாமக எம்.எல்.ஏ. அருள் தெரிவித்தார். அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து செப்டம்பர் 3ம் தேதி ராமதாஸ் அறிவிப்பார்.