வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
*சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினர் பங்கேற்பு
வேலூர் : வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை அறிவியல் கல்லூரியில் சமீபத்தில் இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான பலகட்ட கலந்தாய்வு முடிந்து தற்போது முதலாண்டு வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், இக்கல்லூரியில் எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.
முதல் நாளான நேற்று காலை எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., படிப்புகளில் மாணவர் சேர்க்கை, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. மதியம் மணியளவில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி., மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர் பிள்ளைகள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர் பிள்ளைகள், அந்தமான் நிகோபார் தீவு தமிழ் மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடந்தது.
தொடர்ந்து நாளை 13ம் தேதி பொது கலந்தாய்வு நடக்கிறது. www.tngasa.in. இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். தரவரிசை பட்டியல் விவரங்களை www.mgsacvlr.edi.in என்ற கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு கல்லூரி நிர்வாகத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விவரங்கள் மாணவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.