தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலகின் அதிவேக இன்டர்நெட் சாதனை படைத்தது ஜப்பான்: ஒரே நொடியில் ஓராயிரம் படத்தை பதிவிறக்க முடியும்

புதுடெல்லி: உலகின் அதிவேக இன்டர்நெட்டை ஜப்பான் அறிமுகம் செய்து வைத்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஒரே நொடியில் ஒட்டுமொத்த நெட்பிலிக்ஸ் படங்களையும் டவுன்லோடு செய்து விட முடியும். இன்டர்நெட் தொழில்நுட்பத்தை நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை தகர்த்தெறிந்து தகவல் பரிமாற்ற வேகத்தில் புதிய உலக சாதனையை ஜப்பான் படைத்துள்ளது.
Advertisement

அதாவது, ஒரு நொடியில் 1.02 பெட்டாபைட்ஸ் இன்டர்நெட் வேகத்தை எட்டியிருப்பதாக அந்நாட்டின் தேசிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப மையம் (என்ஐசிடி) அறிவித்துள்ளது. இதன் மூலம் நெட்பிலிக்சிடம் உள்ள அத்தனை படங்களையும் ஒரே நொடியில் பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும், விக்கிபீடியாவில் ஆங்கிலத்தில் உள்ள தகவல்கள் அனைத்தையும் ஒரே நொடியில் பதிவிறக்கலாம். இந்தியாவில் தற்போது அதிகபட்ச இன்டர்நெட் வேகம் 63.55 எம்பிபிஎஸ் ஆக உள்ளது.

இதை விட ஜப்பானின் இன்டர்நெட் வேகம் 1.6 கோடி மடங்கு அதிகம். அமெரிக்காவின் இன்டர்நெட் வேகத்தை விட 35 லட்சம் மடங்கு அதிகம். இந்த அதிவேக இன்டர்நெட்காக சுமிடோமோ எலக்ட்ரிக் நிறுவனம் மற்றும் ஐரோப்பிய ஆய்வாளர்களுடன் இணைந்து பிரத்யேக பைபர் கேபிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கேபிள் வழியாக ஒரே நொடியில் தரவுகளை 1,808 கிமீ தூரத்திற்கு அனுப்பி வைக்க முடியும். இந்த அதிவேக இன்டர்நெட் எதிர்கால ஏஐ தொழில்நுட்பத்திற்கு மிகவும் அவசியமானதாக இருக்கும்.

Advertisement