சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் புஜாரா
மும்பை: இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் அற்புதமான வீரராக விளங்கிய சதேஸ்வர் புஜாரா (37), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக, எக்ஸ் சமூக தளத்தில் அறிவித்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள், 35 அரை சதங்கள் உட்பட, 7,195 ரன்கள் குவித்துள்ளார்.
Advertisement
முதல் தர கிரிக்கெட்டில் புஜாரா, 21,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அவர் கடைசியாக, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி க்கு எதிரான போட்டியில் ஆடியிருந்தார்.
Advertisement