தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருநங்கை படிப்பை தொடர உதவிய சக திருநங்கையால் நெகிழ்ச்சி: பன்னாட்டு நிறுவனத்தில் வேலை - திருநங்கை சாதனை

கோவை: கோவையில் கல்லுரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய திருநங்கையை, சக திருநங்கையும், சமூக ஆர்வலரும் ஒன்றிணைத்து படிக்க வைத்து பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்ற வழிவகை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கும் திருநங்கைகள் கல்வி, வேலைவாய்ப்பு, சட்ட உரிமை மற்றும் சமூக அங்கீகாரம் போன்ற பல விஷயங்களுக்காக போராட வேண்டியுள்ளது. இப்படி இருக்க புதுக்கோட்டை மாவட்டதை பூர்வீகமாக கொண்ட சஜானா, 2017ஆம் ஆண்டில் கோவையில் உள்ள தனியார் பொறியால் கல்லுரியில் ECE படிப்பில் சேர்ந்தார்.

மூன்றாம் ஆண்டு படிப்பை தொடரும் முன் தன் பாலினத்தை உணர்ந்த சஜானா, படிக்கும்போதே திருநங்கைக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆண் பாலினமாக கல்லுரியில் படித்து வந்த சஜானாவுக்கு திருநங்கையாக மாறிய பின் படிப்புக்காக வழங்கப்பட்ட உதவித்தொகை உள்ளிட்ட செலவுகள் தடை செய்யப்பட்டன. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய இருந்த சஜானாவால், பொறியல் படிப்பை தொடர முடியவில்லை.

சமூகத்திலும் நெருக்கடியில் தள்ளப்பட்ட சஜானா ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனரான அனுஷியா என்ற திருநங்கையின் அரவணைப்பில் இருந்து வந்துள்ளார். படிப்பில் சஜானாவுக்கு அதிக ஆர்வம் இருந்ததை அறிந்த திருநங்கை அனுஷியா, தான் சம்மதித்த பணத்தை சஜானாவிடம் வழங்கியுள்ளார். ஆனால் அனுஷியா சம்பாதித்து கொடுத்த தொகை போதுமான அளவில் இல்லை. இந்த நிலையில் அனுஷியா கார் ஓட்டுநராக பணிபுரிந்த மணி - லதா தாம்பத்தினர் நடத்தி வரும் பவுண்டேஷன் மூலம் படிப்பு மீதான சஜானாவின் கனவு நெனவாக்கி உள்ளனர்.

திருநங்கை சஜானாவுக்கு சமூக ஆர்வலராக உள்ள மணி - லதா தம்பதியினர் படிக்க உதவியுடன் மட்டுமில்லாமல் அவர்களின் ஹைதரபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் மென்பொறியாளருக்கான பயிற்சி மற்றும் வேலையும் வழங்கியுள்ளனர். ஓர் ஆண்டு அங்கு பணிபுரிந்து சஜானா தற்போது கோவையில் பிரபல எல் அன்ட் டி கம்பெனியில்மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். சக திருநங்கை அனுஷியா மற்றும் சமூக ஆர்வலர்கள் மணி, லதா தாம்பத்தினர் உதவியால் தன்னோட கனவை நினவாக்கிய சாதித்த திருநங்கை சஜானா ஒட்டுமொத்த சமூகத்தையும் நம்பிக்கையூட்டி இருக்கிறார்.

 

 

Related News