அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024-ல்பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு
Advertisement
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிட வேண்டுமென பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு முடிவுகளின்படி பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் இறையன்பர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Advertisement