கலப்பு திருமணம் நடத்தி வைத்ததால் நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் சூறை: 12 பேர் கைது
Advertisement
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் மதன் - உதயதாட்சாயினிக்கு கலப்பு திருமணம் நடந்தது. இதனையறிந்த உதய தட்சாயினியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்து நேற்று மாலை ரெட்டியார்பட்டியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி அலுவலக கதவை உடைத்து பிளாஸ்டிக் சேர்கள், டேபிள்கள் உட்பட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அப்போது அங்கிருந்த புதுமண தம்பதியினர் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு காரில் ஏறிச் சென்று தப்பி விட்டனர். இதுகுறித்து புகாரின்பேரில் 12 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement