உலகளாவிய தெற்கு பகுதிக்கான நலன்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை அளிக்கப்பட்டதில்லை: பிரதமர் மோடி!
இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். இதேபோன்று, கியூபா நாட்டின் ஜனாதிபதி மிகுவேல் டையஸ்-கேனலையும் அவர் சந்தித்து பேசினார். அவர்களின் பேச்சுவார்த்தையின்போது, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிற அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றியதாவது; 21-ம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் உலகளாவிய தெற்கு பகுதியானது விளிம்பு நிலையில் உள்ளது என சுட்டி காட்டி பேசினார்.
அதனால், சர்வதேச அமைப்புகளில் விரிவான சீர்திருத்தங்களுக்கான அவசர தேவையையும் அவர் சுட்டி காட்டினார். இதேபோன்று இரட்டை நிலைப்பாடுகளால் உலகளாவிய தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிக்கான நலன்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை அளிக்கப்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 2026-ம் ஆண்டில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இதைத்தொடர்ந்து, பிரேசில் நாட்டுக்கான பயணம் முடிந்ததும், இறுதியாக நமீபியா நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.