தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லையில் இருந்து தென்காசி வழியாக திருவனந்தபுரத்திற்கு இன்டர்சிட்டி ரயில்: ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

 

Advertisement

நெல்லை: தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடந்தது. ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா தலைமை வகித்தார். பொருளாளர் சேவியர்ராஜன் முன்னிலை வகித்தார். தங்கராஜ் வரவேற்றார். கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தின் வழியாக கூடுதல் ரயில்கள், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, புதிய ரயில் நிறுத்தம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நெல்லையிலிருந்து தென்காசி வழியாக பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். சிலம்பு மற்றும் தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் ஆகியவற்றை தினசரி இயக்க வேண்டும். மும்பை நெல்லை சாளுக்கியா வாரம் மும்முறை ரயிலை தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.

தென்காசி வழியாக நெல்லை - திருவனந்தபுரம், திருச்செந்தூர் - கொல்லம் இன்டர்சிட்டி ரயில்கள் இயக்க வேண்டும். தென்காசி வழியாக இயங்கும் நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலை நிரந்தரமாக வேண்டும். தென்காசி வழியாக நெல்லை - திருப்பதி வராந்திர சிறப்பு ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை - நெல்லை காலை ரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்க வேண்டும். செங்கோட்டை - ஈரோடு மற்றும் செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு பெட்டிகள் இணைக்க வேண்டும். செங்கோட்டை -நெல்லை காலை ரயில் 8.30 மணிக்குள் நெல்லை ரயில் நிலையத்தை சென்றடைய வேண்டும். தாம்பரம் செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் கீழக்கடையம் ரயில் நிலையத்திலும், கொல்லம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் பாம்பு கோயில் சந்தை ரயில் நிலையத்திலும் இரு மார்க்கங்களிலும் நின்று செல்ல வேண்டும்.

கீழக்கடையம், பாவூர்சத்திரம் ரயில் நிலைய நடைமேடை நீட்டிப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும். கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் லூப் லைனிங் வேகத்தை 30 ஆக அதிகப்படுத்த வேண்டும். சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடை மற்றும் பாவூர்சத்திரம் ரயில் நிலைய முதலாவது நடைமேடை ஆகியவற்றில் கூடுதல் மேற்கூரைகள், இருக்கைகள், மின்விசிறிகள் மற்றும் விளக்குகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர்கள் ராஜா, பிரகாஷ், சங்கர், செந்தில், சந்துரு, பிச்சையா, சுப்புராஜ், ராஜசேகர், வேல்முருகன், மகேந்திரன், ராம்குமார் செல்வா சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளர் ஜெகன் நன்றி கூறினார்.

Advertisement