திருவள்ளூர் அருகே அறிவுசார் நகரம்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அறிவுசார் நகர கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அறிவுசார் நகரம் என்பது திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே செங்காத்தக்குளத்தில் அமைக்கப்படும் ஒரு திட்டமாகும். இது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகத்தால் (TIDCO) உருவாக்கப்படுகிறது. இதன் ஆரம்பகட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே அறிவுசார் நகர கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த அறிவுசார் நகரம் ஊத்துக்கோட்டை அருகே செங்காத்தக்குளத்தில் 167 ஹெக்டேரில் ரூ.853 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. 69.89 ஹெக்டேரில் கல்வி நிறுவனங்கள், 10ஹெக்டேரில் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. 5 ஹெக்டேரில் ஹாஸ்பிட்டாலிட்டி வசதிகள், 7 ஹெக்டேரில் பல்வேறு வசதிகள், 3.6ஹெக்டேரில் குடியிருப்பு வசதிகள் அமைகிறது. 39.672 ஹெக்டேரில் பசுமை பரப்பளவு, 3.044 ஹெக்டேரில் விளையாட்டு வளாகம், 15.839 ஹெக்டேரில் சாலை வசதிகள் அமைக்கப்பட உள்ளன.