ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு இணையதளத்தில் விடைத்தாள் பதிவேற்றம்: டிஎன்பிஎஸ்சி தகவல்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேர்வாணையத்தால் 20.7.2025 முற்பகல் மற்றும் பிற்பகல் முதல் 22.7.2025 வரை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) மற்றும் 4.8.2025 முதல் 10.8.2025 நடந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)க்கான விடைத்தாள்கள் (கணினி வழித் தேர்வு) சில தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க தேர்வாணைய இணையதளத்தில் 23ம் தேதி (நேற்று) மறு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விருப்பப்படும் தேர்வர்கள், தங்களுடைய ஒருமுறை பதிவு எண் வாயிலாக விடைத்தாளினை உரிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் (பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள காலம் அடுத்த மாதம் 21ம் தேதி வரை) செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தேர்வுகள் தொடர்பான விடைத்தாள்களை (கணினி வழித் தேர்வு) வழங்கக் கோரி, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பிறகு பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.