தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்டத்தில் ரூ.11.30 கோடியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்க இடம் தேர்வு: முன்னேற்பாடுகள் மும்முரம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட புளி விவசாயிகள் பயனடையும் வகையில், ரூ.11.30 கோடியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், அதற்கான இடம் தேர்வு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புளி சாகுபடி செய்யப்பட்டாலும், தர்மபுரி மாவட்டத்தின் புளி மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு விளையும் புளி, இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவை கொண்டதாகும். தர்மபுரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் மட்டுமின்றி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், விவசாயிகளின் பட்டா நிலங்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 405 ஏக்கர் பரப்பளவில் புளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை புளி அறுவடை நடக்கும். அறுவடை செய்யப்படும் புளி ஓடு, விதை(கொட்டை) மற்றும் நார் நீக்கப்பட்டு மதிப்புக் கூட்டுப் புளியாக தயார் செய்யப்படுகிறது.

Advertisement

இப்பணியில் சவுளுப்பட்டி, சோகத்தூர், மதிகோண்பாளையம், பழைய தர்மபுரி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு மற்றும் மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் அவர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், புளி சுத்தம் செய்தல் பணி குடிசை தொழிலாக நடந்து வருகிறது. இப்பணிகளில் பெண்கள் தான் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சார்பில், தரமான புளியை தயாரித்து விற்பனை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 20 சதவீத புளி விளைகிறது. 80 சதவீத புளி அண்டை மாநிலங்களில் கொள்முதல் செய்து, சுத்தம் செய்து பதப்படுத்தி, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து தென்னிந்தியா முழுவதும் புளி விற்பனைக்கு செல்கிறது. தர்மபுரி மாவட்ட புளிக்கு புவி சார் குறியீடு வழங்க வேண்டுமென்பது புளி வணிகர்கள், விவசாயிகள் மற்றும் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

தர்மபுரியில் கடந்த 17ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தர்மபுரி மாவட்ட புளி விவசாயிகள் பயனடையும் வகையில், ரூ.11.30 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். தற்போது, இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. 5 இடங்கள் பார்க்கப்பட்டுள்ளது. இதில், இறுதியாக ஒரு இடத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து புளி வணிகர்கள் நலச்சங்க தலைவர் பச்சமுத்து பாஸ்கர் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் புளி கொள்முதல் செய்து, சுத்தம் செய்யும் பணிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக புளி சுத்தம் செய்யும் பணியில் 90 சதவீதம் பேர் பெண்கள் தான் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 20 சதவீத புளி அறுவடை மூலம் கிடைக்கிறது.

80 சதவீத புளி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் இருந்து கொள்முதல் செய்து தர்மபுரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு சுத்தம் செய்து, பதப்படுத்தி கொள்முதல் விலைக்கு வெளி மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. புது புளி மார்ச் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், ரூ.11 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும் என முதல்வர் தர்மபுரியில் நடந்த விழாவில் அறிவித்தார். அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கிராமங்களில் புளி தொழிலை மேம்படுத்த 5 பிரிவுகளாக பிரித்து, பகுதி தலைவர்கள் தேர்வு செய்து செயல்படுத்தி வருகிறோம். இத்தொழிலின் வளர்ச்சிக்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி கடன் வாங்குகிறோம்,’ என்றார்.

Advertisement

Related News