ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (பட்டயம், தொழிற்பயிற்சி நிலை) அடங்கியுள்ள பதவிகளுக்கான தாள்-2க்கான கணினி வழித் தேர்வு வருகிற 7, 11, 18, 22, 27ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement