இன்ஸ்டாகிராமில் இளம் வயதினர் கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது மெட்டா நிறுவனம்!!
வாஷிங்டன்: இன்ஸ்டாகிராமில் இளம் வயதினர் கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மெட்டா நிறுவனம் விதித்துள்ளது. குழந்தைகளின் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற சமூக அழுத்தத்தின் காரணமாக மெட்டா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. PG-13 (Parental Guidance advised for children under 13) தர மதிப்பீட்டு விதிகளுக்கு இணங்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் டீன் அக்கவுண்ட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான ஒன்று இது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இன்ஸ்டாகிராம் PG-13 என்ற தரநிலையைப் பயன்படுத்துவதன் மூலம், பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டை காட்சிகள் அல்லாத வீடியோக்களை இளம் வயதினர் காண வழிவகை செய்யும்.இந்த கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்கு, இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறார்கள் தங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் எனக் கூறினாலும் அதனை கண்டறிய அதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. தேவையில்லாதவற்றை பின்தொடர்வதும், தகவல் அனுப்புவதும், கருத்து தெரிவிப்பதும் தடுக்கப்படும். பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது. இந்த புதுப்பிப்பு தற்போது ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்காவில் படிப்படியாக வெளியிடப்படுகிறது. மேலும் பல நாடுகளுக்கு வரும் மாதங்களில் விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.