ஊடுருவல் குறித்த பிரதமரின் குற்றச்சாட்டு திசைத்திருப்பும் தந்திரம்: தேஜஸ்வி யாதவ் கருத்து
பாட்னா: பீகார் மாநிலம் பூர்னியாவில் நடந்த பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘‘எதிர்க்கட்சிகள் ஊடுருவல்காரர்களை கவசம் வைத்து பாதுகாக்கின்றன ” என்று குறிப்பிட்டு இருந்தார். பிரதமரின் இந்த கருத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரான தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Advertisement
இது குறித்து தேஜஸ்வி கூறுகையில், ‘‘பீகாரில் ஊடுருவல்காரர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள்(பிரதமர்) 11 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 20 ஆண்டுகளாக மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறீர்கள். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஊடுருவல் பிரச்னையை எழுப்புவது திசை திருப்பும் தந்திரம்” என்றார்.
Advertisement