தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தோனேசியா மதப்பள்ளி விபத்து: பலி எண்ணிக்கை 54ஆக உயர்வு

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் சரிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள அல்கோசினி இஸ்லாமிய உறைவிடபள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமானதால் பழைய இரண்டு மாடி கட்டிடத்தில் அனுமதி இன்று கூடுதலாக சில கட்டடங்கள் கட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள மாணவர்கள் வழக்கம் போல தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென கூடுதல் தளங்களின் பாரம் தாங்காமல் அந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

Advertisement

அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த பச்சிளம் மாணவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அடுத்து சில நொடிகளில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும் 65 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருடன் சிக்கி புதைத்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு கனரக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதே சமயம் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள மாணவர்களுக்கு குழாய்கள் மூலம் ஆக்ஸிஜன் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. மீட்பு பணிகள் முடிந்த பிறகே எவ்வளவு மாணவர்கள் பலியாகி உள்ளனர் என்ற விவரம் தெரியவரும் என போலீசார் கூறியிருந்தனர். இந்த நிலையில் ஒரு வார காலமாக மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப்படையினர். 80 சதவீத இடிபாடுகளை அகற்றி உள்ளதாகவும் இதில் பல மாணவர்கள் உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்ப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே சமயம் இதுவரை 50 பேர் இறந்துவிட்டதாகவும் 4 பேரின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளதால் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய மீட்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர் அல்கோசினி பள்ளியின் அடித்தளத்தால் தங்க முடியாத அளவிற்கு மேல் தளங்களில் கட்டுமான பணிகள் நடந்ததே பள்ளி கட்டடம் இடிந்துவிழ காரணம் என தெரிவித்தார். ஒரே இடத்தில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement

Related News