இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 2வது நாளாக விமான கட்டணம் பல மடங்கு உயர்வு..!!
இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 2வது நாளாக விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. நாளை சென்னையில் இருந்து கோவை செல்ல விமான கட்டணம் ரூ.72,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ விமானங்கள் ரத்தால் ஏர் இந்தியா நிறுவனம் விமானக் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சென்னையில் இருந்து இன்று டெல்லிக்கு செல்ல விமான கட்டணம் ரூ.59,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல விமானக் கட்டணம் ரூ.25,000ஆக நிர்ணயிக்கப்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி செல்ல விமான கட்டணம் ரூ.26,000ஆக உயர்ந்தது.
Advertisement
Advertisement