இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி!
ராய்ப்பூர்: இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்தது. இந்திய அணி நிர்ணயித்த 358 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.
Advertisement
Advertisement