இந்தியர்கள் ஆஸி.யில் குடியேறுவதை எதிர்த்து பேரணி: அந்நாட்டு அரசு கடும் கண்டனம்
ஆஸ்திரேலியா: இந்தியர்கள் ஆஸி.யில் குடியேறுவதை எதிர்த்து பேரணி நடத்துவதற்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக ஒற்றுமையைக் குலைக்க நினைத்தால் நாட்டில் இடம் இல்லை ஆஸ்திரேலி அமைச்சர் டோனி பக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இனவெறுப்பு அடிப்படையிலான தீவிர வலதுசாரி நடவடிக்கைக்கு இடமில்லை. வெறுப்புணர்வை பரப்பும் இந்த பேரணிகள் நவீன நாஜிக் குழுக்களால் நடத்தப்படுகிறது. குடியேற்ற எதிர்ப்புப் பேரணிகள் ஏற்க முடியாதவை என்றும் ஆஸி. அமைச்சர் டோனி பக் அறிக்கை வெளியிட்டார்.
சிட்னி, மெல்போர்ன், கான்பெரா உள்பட பல நகரங்களில் நடந்த பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். 2013லிருந்து 2023க்குள் ஆஸி.யில் குடியேறிய இந்தியர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிப்பு என புகார் எழுந்தது. ஆஸி.யில் குடியேறியவர்களுக் எதிராக நியூநாஜிகள், மக்களை தூண்டி விடுவதாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.