தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய ரயில்வேயின் மிக நெரிசலான மும்பை - சென்னை வழித்தடத்தில் 3வது மற்றும் 4வது ரயில் பாதை: அளவுக்கு அதிகமான நெரிசலை குறைக்கும்

சென்னை: மகாராஷ்டிராவில் உள்ள பத்லாபூர்-கர்ஜாத் பகுதியில் 32 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைகளை அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இது மும்பை புறநகர் ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்தும் முக்கிய திட்டமாகும். அதேபோல். இந்த முடிவு மும்பையிலிருந்து சென்னை செல்லும் 1,238 கிலோ மீட்டர் நீளமுள்ள அதிக நெரிசல் கொண்ட பாதையின் ஒரு பகுதி என்பதால் மிக முக்கியமானது. மும்பையிலிருந்து புனே, சோலாப்பூர், குண்டக்கல், அரக்கோணம் வழியாக சென்னையை இணைக்கும் பாதையாகும்.

Advertisement

இந்திய ரயில்வேயில் ஏழு முக்கிய பாதைகள் அதிக நெரிசல் கொண்ட பாதைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பாதைகள் இந்திய ரயில்வே பாதைகளில் வெறும் 16% மட்டுமே. ஆனால், மொத்த ரயில் போக்குவரத்தில் 41 சதவீதம் இவை கையாளுகின்றன. இதனால்தான் இவை இந்திய ரயில்வேயின் முதுகெலும்பு என்று கூறப்படுகிறது. மொத்தம் 69,181 கிலோமீட்டர் ரயில் பாதைகளில், இந்த அதிக நெரிசல் பாதைகள் 11,051 கிலோமீட்டர் அல்லது 15.97 சதவீதம் மட்டுமே. சாதாரணமாக, ஒரு ரயில் பாதை அதன் மொத்த திறனில் 70-80 சதவீதம் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் ரயில்கள் தடையின்றி செல்ல முடியும். ஆனால் இங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது.

அதிக நெரிசல் பாதைகளில் வெறும் 4.60 சதவீதம் மட்டுமே 80 சதவீதம் குறைவான திறனில் இயங்குகிறது.

18.89% பாதைகள் 80-100% திறனில் இயங்குகின்றன

32.75% பாதைகள் 100-120% திறனில் இயங்குகின்றன

29.53% பாதைகள் 120-150% திறனில் இயங்குகின்றன

14.11 % பாதைகள் 150% அதிகமாக இயங்குகின்றன

உதாரணமாக, மும்பை-சென்னை பாதையில் உள்ள 28 கிலோமீட்டர் கர்ஜாத்-லோனாவலா பகுதியில், நாள் ஒன்றுக்கு ஒரு வழியில் 67 ரயில்கள் செல்கின்றன. ஆனால் அதன் அதிகபட்ச திறன் 40 ரயில்கள் மட்டுமே. இதனால் 167 % திறனில் இயங்குகிறது.

இந்தியாவை இணைக்கும் ஏழு பிரதான பாதைகளில், பாதை 1: ஹவுரா-டெல்லி (1,422 கி.மீ) - தான்பாத், பிரயாகராஜ், கான்பூர் வழியாக, பாதை 2: ஹவுரா-மும்பை (2,039 கி.மீ) - கரக்பூர், டாடா நகர், பிலாஸ்பூர், நாக்பூர் வழியாக, பாதை 3: மும்பை-டெல்லி (1,322 கி.மீ) - சூரத், கோத்ரா, ராத்லாம், மதுரா வழியாக, பாதை 4: டெல்லி-கவுகாத்தி (1,876 கி.மீ) - மொரதாபாத், கோண்டா, கோரக்பூர் வழியாக, பாதை 5: டெல்லி-சென்னை (2,037 கி.மீ) - மதுரா, ஜான்சி, போபால், நாக்பூர், விஜயவாடா வழியாக, பாதை 6: ஹவுரா-சென்னை (1,117 கி.மீ) - பத்ராக், விசாகப்பட்டினம், விஜயவாடா வழியாக, பாதை 7: மும்பை-சென்னை - இதில்தான் புதிய பாதை அமைக்கப்படுகிறது. மற்ற பாதைகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரயில்வேயில் மொத்தமாக பார்த்தால் 45 % பாதைகள் 70% குறைவாக பயன்படுத்தப்படுகின்றன.

29 % 70-100 % இயங்குகிறது

25 % 100-150 % இயங்குகிறது

வெறும் 1 % மட்டுமே 150 % அதிகமாக இயங்குகிறது

ஆனால், அதிக நெரிசல் பாதைகளில் நிலைமை முற்றிலும் மாறுபடுகிறது. தேசிய ரயில்வே திட்டத்தின்படி, தற்போதுள்ள வசதிகளுடன் 2051ம் ஆண்டுக்குள் எந்த பாதையும் 100% குறைவாக இயங்காத 92% பாதைகள் 150% அதிகமாக இயங்கும். 2031க்குள் 50 %பாதைகள் 150 % அதிகமாக நெரிசலாக இருக்கும். 39% பாதைகள் 100-150% அதிகமாக இருக்கும். வெறும் 9% பாதைகள் மட்டுமே 70-100% அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நெரிசலை குறைக்க ஒன்றிய அரசு பல வழிகளில் பணியாற்றி வருகிறது. குறிப்பாக ரயில் பாதைகளை அதிகரித்தல், ஒற்றை பாதையை இரட்டை பாதையாகவும், இரட்டையை மூன்று அல்லது நான்கு பாதைகளாகவும் மாற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறது.

* தற்போதைய நிலை

11,051 கி.மீ அதிக நெரிசல் பாதைகளில்

250 கி.மீ ஒற்றை பாதை

8,113 கி.மீ இரட்டை பாதை

2,040 கி.மீ மூன்று பாதைகள்

625 கி.மீ நான்கு பாதைகள்

23 கி.மீ ஐந்து/ஆறு பாதைகள்

தேசிய ரயில்வே திட்டத்தின்படி ஹவுரா-டெல்லி மற்றும் டெல்லி-கவுகாத்தி பாதைகள் முழுவதும் 3 பாதைகளாக மேம்படுத்தப்படவுள்ளது. ஹவுரா-மும்பை, மும்பை-டெல்லி, ஹவுரா-சென்னை, மும்பை-சென்னை பாதைகள் முழுவதும் மூன்று அல்லது நான்கு பாதைகளாக மாற்றப்பட உள்ளது. இந்த திட்டங்கள் நிறைவேறினால், எதிர்காலத்தில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவைகளை சிறப்பாக கையாள முடியும். ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கும், தாமதங்கள் குறையும். பத்லாபூர்-கர்ஜாத் பகுதியில் புதிய பாதைகள் அமைப்பது இந்த பெரிய திட்டத்தின் முக்கிய அங்கம். இது மும்பை-சென்னை பாதையில் நெரிசலை குறைக்க பெரிதும் உதவும்.

* சமீபத்திய ஆண்டுகளில்

2021-22 1,983 கி.மீ புதிய பாதைகள்

2022-23 3,185.5 கி.மீ

2023-24 2,244 கி.மீ

2024-25 2,900 கி.மீ.,க்கும் அதிகம்

கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு பாதை முழுவதும் இயங்குகிறது. மேற்கு பாதை 96.4 சதவீதம் முடிந்துள்ளது. இது சரக்கு ரயில்களை தனியாக எடுத்துச் செல்லும், பயணிகள் ரயில்களுக்கு வழி விடும்.

Advertisement