இந்திய விமானங்கள் பறக்க தடை நீட்டிப்பு: பாகிஸ்தான் அறிவிப்பு
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு ஏப்ரல் 30ம் தேதி முதல் இந்தியா தடை விதித்தது. இதற்குப் போட்டியாக, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தானும் ஏப்ரல் 24ம் தேதியே தனது வான்பரப்பை மூடியது.
இரு நாடுகளும் பரஸ்பரம் விதித்துள்ள இந்தத் தடைகள், பதற்றமான சூழல் காரணமாகப் பலமுறை நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசு விதித்த தடை வருகிற 24ம் தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில், இந்திய விமானங்களுக்கான வான்வழித் தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் 3.50 மணிக்கு அமலுக்கு வந்த இந்த புதிய உத்தரவின்படி, இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்கள், இந்தியாவிற்குச் சொந்தமான அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட ராணுவ மற்றும் சிவிலியன் விமானங்கள் எதுவும் பாகிஸ்தான் வான்பரப்பைப் பயன் படுத்த முடியாது. இந்தத் தடை ஆகஸ்ட் 24ம் தேதி காலை 5.19 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.