கபடி வீரர்களுக்கு நவீன பயிற்சி கூடங்கள் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
Advertisement
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: பஹ்ரைன் கபடி போட்டியில் அபினேஷ் மோகன் தாஸ், கார்த்திகா ரமேஷ் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று, தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளனர். இருவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
கண்ணகி நகர், வட சென்னை வியாசர்பாடி பகுதியில் கேரம், குத்து சண்டை, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் இருக்கின்றனர். இவர்களுக்காக நவீன ஒருங்கிணைந்த பயிற்சிக் கூடங்கள் மற்றும் நவீன வசதிகள் கொண்ட விளையாட்டுத் திடல்கள் அமைத்து தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
Advertisement